Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபுதேவாவின் 'தேவி 2' சென்சார் தகவல்கள்

பிரபுதேவாவின் 'தேவி 2' சென்சார் தகவல்கள்
, செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (19:05 IST)
இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவான 'தேவி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். திகில் பேய்ப்படம் என்பதால் குழந்தைகள் அதிகளவில் விரும்பி பார்க்கும் நிலையில் இந்த படம் யூ சான்றிதழ் பெற்றிருப்பது படக்குழுவினர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது
 
பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சரளா, குருசோமசுந்தரம், நாசர், சதீஷ், யோகிபபு, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். அயங்கா போஸ் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது
 
webdunia
இந்த படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தேவி' படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியின் ஷூட்டிங்கை நேரில் பார்வையிட்ட சூர்யா! வைரலாகும் புகைப்படம்!