Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபுதேவா படத்தை வாங்கிய ’தடம்’ பதித்த நிறுவனம்

பிரபுதேவா படத்தை வாங்கிய ’தடம்’ பதித்த நிறுவனம்
, செவ்வாய், 26 மார்ச் 2019 (15:03 IST)
பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகி உள்ள தேவி 2 படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்க்ரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகி ஓரளவு லாபத்தை பார்த்தது. அதனால் தேவி படத்தின் இரண்டாம் பாகமான 'தேவி 2' படம் உருவாகியுள்ளது.

முதல் பாகம் போலவே பிரபுதேவாவோடு, தமன்னா, நந்திதா, கோவை சரளா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ், யோகிபாபு, குருசோமசுந்தரம், நாசர், சோனுசூட் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது இந்தப்படத்தின் தமிழிநாடு திரையரங்க உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் விநியோகம் செய்த தடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரன்வீர் சிங்கிற்கு கிளாஸ் எடுக்கும் கபில்தேவ் மகள்... 1983 பட அப்டேட்