Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ...ரசிகர்கள் மகிழ்ச்சி

நயன்தாராவை  பாராட்டிய  சூப்பர் ஸ்டார் ...ரசிகர்கள் மகிழ்ச்சி
, திங்கள், 6 பிப்ரவரி 2023 (19:26 IST)
நடிகை   நயன்தாராவை  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பாராட்டியுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர்  நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் வெளியான படம் பதான்.

இப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

இதுவரை இப்படம் உலகம் முழுவதும் ரூ.750 கோடி வசூலீட்டியுள்ள நிலையில், விரைவில் ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் – நயன் தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ஜவான்.

இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.

இந்த நிலையில், அடிக்கடி ஷாருக்கான் சமூக வலைதளத்தில் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடுவார்.

அந்த வகையில், ஒரு ரசிகர், நயன்தாரா பற்றி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஷாருக்கான்,   நயன் தாரா  மிகவும் இனிமையானவர், அவருக்குப் பல மொழிகள் தெரியும்!  இப்படத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தது   நல்ல அனுபவமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’பாலிவுட்டில் என்னை உளவு பார்க்கின்றனர்’’ - கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு