Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாருக் கான் படத்தில் தீபிகா படுகோனின் சம்பளம் இவ்வளவா?

ஷாருக் கான் படத்தில் தீபிகா படுகோனின் சம்பளம் இவ்வளவா?
, திங்கள், 23 நவம்பர் 2020 (10:34 IST)
நடிகர் ஷாருக் கான் நடிக்கும் பதான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகொனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டின் பாட்ஷா , கிங் கான் என பலவாறு புகழப்படுபவர் நடிகர் ஷாருக் கான். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால் சினிமாவில் இருந்து ஒரு சிறு ஓய்வில் இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் தமிழ் இயக்குனர் அட்லி உள்பட பல இயக்குனர்களிடம் கதைகேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.

அதில் ஒன்று வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆன்ந்த் இயக்கும் பதான் படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் சல்மான் கான் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் படத்துக்கு பதான் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இதுவரையில் இவர் எந்த படத்துக்கும் வாங்காத சம்பளமாக 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரி கிட்ட வச்சுக்காதே.... நாமினேட் ஆன 6 முக்கியஸ்தர்கள் - வெளியேறப்போவது நிஷா?