Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய சினிமாவின் குயின், தீபிகா படுகோன்க்கு இன்று பிறந்த நாள்!

Advertiesment
இந்திய சினிமாவின் குயின், தீபிகா படுகோன்க்கு இன்று பிறந்த நாள்!
, சனி, 5 ஜனவரி 2019 (10:50 IST)
இந்திய சினிமாவின் குயினாக வர்ணிக்கப்படும் தீபிகா படுகோண் 1986ம் ஆண்டு  ஜனவரி 5,ம் தேதி டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோண் தம்பதிக்கு பிறந்தார்.  இவர் 11 மாத குழந்தையாக இருக்கும் போது இவர் குடும்பம் இந்தியாவில் பெங்களூருக்கு நகர்ந்தது  


 
இவர் 11 மாத குழந்தையாக இருக்கும் போது இவர் குடும்பம் இந்தியாவில் பெங்களூருக்கு நகர்ந்தது. படுக்கோன் பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலை பள்ளியிலும், பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார்.

webdunia


இவர் உயர்நிலைப் பள்ளியில் இருக்கும்பொழுதே தன் தந்தையை போல மாநில அளவில் பூபந்தாட்டம் விளையாடினார் மற்றும் இவர் தந்தையின் பூபந்தாட்ட சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.[5] இருந்தாலும், இவர் பூப்பந்தாட்டத்தில் சாதிப்பதில் ஆர்வம் காட்டவில்லை எனவே இதை விட்டுவிட்டு தன் ஐசிஎஸ்சி பரீட்சைகளில் கவனம் செலுத்தினார்

webdunia

 
பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது மாடலிங் செய்து வந்தார்.  அப்போது படுக்கோன் விளம்பரத் துறையை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.   லிரில், டாபர் லால் பவுடர், குளோஸ் அப் டூத் பேஸ்ட் மற்றும் நகை விற்பனை நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களின் விளம்பர தூதராக இருந்தார்.
 
2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக "ஐஸ்வர்யா" என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் "ஓம் ஷாந்தி ஓம்" இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார்.  அதன் பிறகு லவ் அஜய் கால், பஜ்னே ஏ ஹசீனோ, ஹவுஸ்புல், ஹேப்பி நியூ இயர். காக்டெய்ல், ஏக் ஜவானி ஹேய் திவானி மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ், படிஜரோ மஸ்தானி, பத்மாவதிஉள்பட ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்தார். தமிழில் ரஜினியுன் கோச்சடையான் என்ற அனிமேசன் படத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த பத்மாவதி படமானது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த படத்தில் தங்கள் தெய்வமாக வழிபடும் அம்மனை இழிவுப்படுத்தியதாக கருதி, சில அமைப்பினர் இந்தப் படத்திற்கும் மற்றும் இவருக்கும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர் மற்றும் தீபிகா படுகோண் தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 5 கோடி தரப்படும் எனக்கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தினர்.

webdunia

 
இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்தார் தீபிகா படுகோன் . இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடும் தீபிகாவை பல்வேறு சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வருகிறார்கள். ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேட்ட முன்பதிவு தொடங்கியது! காளியின் ஆட்டம் ஆரம்பம்