Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்கள் நீயே ...காற்றும் நீயே...நடிகைக்கு இன்று பிறந்தநாள்

Advertiesment
கண்கள் நீயே ...காற்றும் நீயே...நடிகைக்கு இன்று பிறந்தநாள்
, வெள்ளி, 4 ஜனவரி 2019 (16:28 IST)
இந்திய திரைப்பட நடிகையும் வடிவழகியுமாக கருதப்படுபவர் அனுபமா குமார் ஆவார். இவர்  டிசம்பர் 4 - 1974 ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்ப காலக்கட்டங்களில்  விளம்பரங்களில் நடித்தார். பின்னர் 2004ஆம் ஆண்டில் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த பொக்கிஷம் என்ற படம் மூலமாக அனுபமா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
 
அதன் பின் வம்சம், அய்யனார், ஆடுபுலி ஆட்டம், போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டில் வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். அப்படத்தில் வரும் கண்கள் நீயே ! காற்றும் நீயே என்ற குழந்தைப் பாடலின் மூலம் தன் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
 
அனுபமா குமார், இதுவரை 300 க்கும் மேற்பட்ட படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு சிவக்குமார் என்ற கணவரும், ஆதித்யா என்ற மகனும் இருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் மார்க்கெட் சரிந்ததா? அஜித்துடனான போட்டி ஏன்?