Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிஞர் பிறைசூடன் மறைவு: வைரமுத்து இரங்கல்

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (18:47 IST)
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி பாடலாசிரியரும் , கவிஞருமான திகழ்ந்த பிறைசூடன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்த்திரைப்பட பாடலாசியர்கள் சங்கம் மற்றும் திரைத்துறையினர் கவிஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கவிஞர் பிறைசூடன், நடந்தால் இரண்டி, இதயமே இதயமே, ஒரு காதல் கவிதைகள் படித்திடும் நேரம், ரசிகா ரசிகா உள்ளிட்ட 1500 பாடல்களை 400 படங்களில் எழுதியுள்ளார். 

இந்நிலையில், கவிஞர் பிறைசூடனின் மறைவுக்கு கவிப்பேரரசர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிறைசூடன் என்ற அழகிய பெயருடையான் போயுற்றான் நல்ல மனிதனாய் நல்ல கலைஞனாய் அறியப்பட்டோன் ஆவிதுறந்தான் சிந்தனையாளன் செயற்பாட்டாளன் சக கவிஞர்களைக் கொண்டாடும் கொள்கையாளன் சென்றுவிட்டான் தமிழோடு வாழ்வான்; அகமே அமைதியுறுக! எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments