விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒருவராக மாறிப்போனவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக அறியப்பட்டது விஜய் டிவியின் காபி வித் டிடி மூலமாகதான். ஆனால் சமீபகாலமாக இவர் எந்த நிகழ்ச்சியிலும் தோன்றுவதில்லை. இடையில் அவரின் திருமண வாழ்க்கையும் முறிந்து போனது.
இதற்கிடையில் அவர் முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டார். பொது மேடைகளில் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இது சம்மந்தமாக தற்போது அவர் நான்காவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் மலையாள உலகின் முன்னணி யுடியூப் சேனலான பார்லே மானி ஷோவில் விருந்தினராகக் கலந்துகொண்டார். அதில் பேசும் போது ஆண்மை மிக்க ஆண் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் “இந்தக் கேள்விக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னால் என் பதில் ஆண் என்பவர் உயரமாக, பைக் வைத்துக்கொண்டு இருப்பவராக இருக்கவேண்டும் என்பது போன்று இருந்திருக்கும். ஆனால் இப்போது என் வரையறை மாறிவிட்டது.
பெண்கள் வீடு திரும்பும்போது இன்னிக்கு உன் நாள் எப்படி போச்சு? எனக் கேட்டு சோர்வாக இருந்தால் அதைப்பற்றி கேட்டு காலை அமுக்கிவிட்டு அவளை ரிலாக்ஸ் பண்ற, கிச்சன்ல அவளுக்கு உதவி பண்ற ஒரு ஆள்தான் ஆண்மை மிக்கவர் என சொல்வேன்” எனப் பேசியுள்ளார்.