ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆடட்க்காரரான டேவிட் வார்னர் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாமா என்பது குறித்து யோசித்து வருவதாக சொல்லியுள்ளார்.
இன்றைய தேதியில் டி 20 போட்டிகளில் மிகவும் அபாயகரமான வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர். அதுமட்டுமில்லாமல் மற்ற இரு வடிவிலானப் போட்டிகளிலும் அவர் நல்ல ஆடும் திறனில் உள்ளார். ஆனால் இப்போது திடீரென டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறலாமா என்ற யோசனையில் இருப்பதாக சொல்லியுள்ளார்.
இதுகுறித்து அவர் ‘எனக்கு 33 வயதாகிறது. மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். அதனால் குடும்பத்துடன் நேரம் செலவிடும் பொருட்டு டி 20 போட்டிகளில் ஓய்வு பெற்று மற்ற இரு வடிவிலானப் போட்டிகளில் கவனம் செலுத்தலாம் என நினைத்து வருகிறேன். இது குறித்து விரேந்திர சேவாக் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோருடன் யோசனை பெற்றுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.