தனது ரசிகரை கொலை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தனது ரசிகரான ரேணுகாஸ்வாமியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் முதுகுவலியால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சைக்காக 6 வார இடைக்கால ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அதற்கு கர்நாடக ஐகோர்டு அனுமதி வழங்கிய நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை மேற்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாக சிறையில் இருந்த நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைத்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Edit by Prasanth.K