ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் 90ஸ் கிட்ஸின் பேவரைட்டான டார்கி வந்துள்ளது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கா மக.. அக்கா மக.. எனக்கொருத்தி இருந்தாடா என்ற பாடலை பாடாத 90ஸ் கிட்ஸ் வெகு சொற்பம். அப்போது டிவிடியில் படம் பார்க்கும் பழக்கம் அதிகரித்திருந்த நிலையில் பல பாட்டு டிவிடிகளில் மைக்கெல் ஜாக்சன் பாட்டில் அக்கா மகளை மிக்ஸ் செய்து போட்டிருக்கும் அந்த பாடல் வெகு பிரபலம்.
அந்த பாடலை பாடியவர்கள்தான் சிங்கப்பூர், மலேசியாவில் பிரபலமான தமிழ் இசைக்குழுவான டார்கி. இவர்களது இந்த பாடல் மட்டுமல்லாமல் புலி..புலி..புலி பாடல் உள்ளிட்டவையும் வெகு பிரபலம். தற்போது அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தில் டார்கியின் புலி புலி பாடல் ட்ரெய்லர் ஆக்ஷன் கட்டில் இடம்பெற்று வைரலாகியுள்ளது.
அதை தொடர்ந்து டார்கியும் பிரபலமாக தொடங்கியுள்ளார்கள். இதுகுறித்து பேசிய டார்கி நாகராஜா, குட் பேட் அக்லி இயக்குனர் ஆதிக் தங்களுக்கு பெரிய ரசிகர் என்றும், இந்த படத்திற்காக தங்களை ஸ்பெஷலாக வரவழைத்து ஷூட்டிங் செய்ததாகவும் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக கபாலி படத்தில் டார்கி பாடல் ஒன்றை பாடியுள்ளனர். இந்த குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லரிலேயே ஒத்த ரூவா தாரேன், டார்கியின் புலி புலி பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் சர்ப்ரைஸாக வேறு சில 90ஸ் பாடல்களும் உள்ளதாக ஆதிக் கூறியுள்ளாராம்.
Edit by Prasanth.K