தயவுசெய்து குழந்தைகளை கண்டுபிடித்து கொடுங்கள்!? – நடிகர் தனுஷ் ட்வீட்! களத்தில் இறங்கிய ரசிகர்கள்

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (15:32 IST)
காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து கொடுங்கள், இந்த செய்தியை தயவு செய்து ஷேர் செய்யுங்கள் என நடிகர் தனுஷ் ட்விட்டரில் வேண்டியிருக்கிறார்.

சினிமா படங்களுக்கு கிராபிக்ஸ் வேலைகள் செய்து தரும் தீபக் சோமிசெட்டி என்பவர் தனது ட்விட்டரில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அந்த குழந்தைகள் காணாமல் போய் விட்டதாகவும், அவர்களை யாராவது எங்கேயாவது பார்த்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள தனுஷ் “தயவுசெய்து இதை ஷேர் செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் உடனடியாக இதை ட்விட்டர் மட்டுமல்லாது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகியவற்றிலும் ஷேர் செய்து வருகின்றனர். சிலர் தனுஷுக்காக அந்த குழந்தைகளை எப்படியாவது கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று செயல்பாட்டில் இறங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் தனுஷின் பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த ஒருவர் “அவர்கள் வீட்டில் ஏதோ பிரச்சினை. அந்த குழந்தைகளை அவரது அப்பாதான் அழைத்து போயிருக்கிறார். அதனால் இதை தொடர்ந்து ஷேர் செய்ய வேண்டாம்” என கூறியிருக்கிறார். இது உண்மையா என்று தெரியாத நிலையில் இந்த புகைப்படம் வைரலாக ஷேர் ஆகி வருகிறது.

Found pola https://t.co/qIxpqHlZdA

— Manoj (@Manoj_tweetz) September 9, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இலங்கையிலிருந்து தர்ஷனை சந்திக்க கிளம்பிய முக்கிய நபர் - வைரலாகும் புகைப்படம்!