இலங்கையிலிருந்து தர்ஷனை சந்திக்க கிளம்பிய முக்கிய நபர் - வைரலாகும் புகைப்படம்!

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (14:55 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் அவர்களை சந்திப்பதற்காக இந்த வாரம் முழுக்க Freeze டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்று முகினின் தாய் மற்றும் அவரது தங்கை இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். 


 
இந்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியை தருவது மட்டுமல்லாது. பார்வையளர்களுக்கு நல்ல சுவாரஸ்யத்தை கொடுத்து வருகிறது. எனவே இந்த கடைசி இரண்டு வாரங்களில் தொலைக்காட்சியின் TRPயும் கிடுகிடுவென உயர்ந்துவிடும். 


 
அந்தவகையில் தற்போது தர்ஷனை சந்திக்க அவரது தாய் மற்றும் தங்கை இருவரும் இலங்கையிலிருந்து கிளப்பியுள்ளனர். அவர்கள் இருவரும் விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ராசி கண்ணாவின் ரொமான்டிக் எக்ஸ்பிரஷன்ஸ்!