Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரலாறு படத்தில் முதலில் நடிக்க வேண்டியது அஜித் இல்லை – ரகசியம் உடைத்த நடன இயக்குனர் !

Advertiesment
வரலாறு படத்தில் முதலில் நடிக்க வேண்டியது அஜித் இல்லை – ரகசியம் உடைத்த நடன இயக்குனர் !
, புதன், 26 பிப்ரவரி 2020 (08:27 IST)
வரலாறு படத்தில் அஜித்

தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனரான சிவசங்கர் வரலாறு படத்தில் அஜித்துடன் பணியாற்றியது குறித்து மனம் திறம் பேசியுள்ளார்.

தொடர் தோல்விகளால் தவித்துக் கொண்டிருந்த அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியான வரலாறு திரைப்படம். இதில் அஜித் பெண் தன்மை கொண்ட நளினமான நடனக்காரராக நடித்திருப்பார். அதற்காக அந்த படம் முழுவதும் கூடவே இருந்து அஜித்துக்கு ஆலோசனைகள் கொடுத்தவர் பிரபல நடன் இயக்குனர் சிவசங்கர்.

இப்போது அந்த படம் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் அவர். சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘ இந்த படத்தில் முதலில் கமலை வைத்துதான் எடுக்க நினைத்தார் ரவிக்குமார். ஆனால் அப்போது அவர் பிஸியாக இருந்ததால் அஜித்துக்கு இந்த கதாபாத்திரம் சென்றது. முதலில் அஜித் அந்த படத்தில் நடிக்க பயந்தார். ஆனால் இயக்குனர் எடுத்து சொல்லி மிகப் பெரிய பாராட்டுகளை பெறும் என சொன்னதும் நடிக்க சம்மதித்தார். அவருக்கு சில நடன அசைவுகள் மற்றும் நளினங்களை சொல்லித்தர என்னை கூடவே வைத்துக்கொண்டார் ரவிக்குமார். அஜித்துக்கு நடனம் வரவில்லை என்றாலும் நடிப்பில் அசத்தினார்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு… ஷூட்டிங் செல்ல மறுக்கும் கமல் ! லைகா அதிர்ச்சி !