Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கள் கருத்தை திணித்து அசிங்கப் படுத்த வேண்டாம்- பார்த்திபன் வேண்டுகோள்

Advertiesment
parthiban as parthiban
, திங்கள், 4 டிசம்பர் 2023 (13:24 IST)
சென்னையில் உள்ள சாலைகள் வெள்ளக்காடான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுவடைந்துள்ள மிக்ஜாம் தற்போது சென்னைக்கு 90 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலை பாதுகாப்புடன் எதிர்கொள்வோம் என்று தன் வலைதள பக்கத்தில்  பதிவிட்ட  நடிகர் பார்த்திபன், அப்பதிவில் ‘அன்றாடம் உழைத்து உண்பவர்களுக்கு இந்த பேய் மழையும்,மிக்ஜாம் புயலும் மத்திய பிரதேச விரோதிகள்.தேசத்தின் ஒரு பகுதியில் காங்கிரஸும், மறுபகுதியில் பிஜேபியும் வெற்றி பெறலாம்,ஆனால் ஏழை மக்கள் உடலின் மத்திய பிரதேசத்தில் பசி இல்லாமல் பார்த்துக் கொள்வதே தேசிய வெற்றி!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை ஒருசிலர் தவறாகப் புரிந்து கொண்டனர். இதுகுறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ‘மத்ய பிரதேசம்’என்று நான் குறிப்பிட்டது உடலின் முக்ய பகுதியான வயிறு அதன் பசியின் கொடுமையை கடுமையை சொல்லவே. மற்றபடி பிஜேபியையோ காங்கிரஸையையோ உயர்நிலை படுத்தும் அரசியலை முன்னிலை படுத்தும் அரசியலை அல்ல.ஓரிருவர் என் கருத்தை தவறாக புரிந்துக் கொண்டு அவர்கள் கருத்தை சொல்கிறார்கள்.அவரவர் கருத்தை அவரவர் சொல்லட்டும்.அடுத்தவர் கருத்தை அதுவும் இதுபோன்ற அசாதாரன சூழலில் தங்கள் கருத்தை தினித்து அசிங்கப் படுத்த வேண்டாம்.

‘மத்ய பிரதேசம்’ என்ற வார்த்தையை நான் இன்று புதிதாக பயன்படுத்தவில்லை.

19/06/2000 -த்தில் என் கிறுக்கல்களில் எழுதியிருக்கிறேன்.அன்றைய அரசியல் சூழல் இன்றையதல்ல.எனவே நான் எப்போதுமே அரசியலுக்கு அப்பார்பட்டும் மனிதம் வளர்க்க முயல்பவன்.எனவே ஒரு வேண்டுகோள் இந்த சூழலிலிருந்து மீண்டும் வர உதவுங்கள்.. நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'அண்ணன் விஜயகாந்த் நலம்பெற பிரார்த்திக்கிறேன்'- சூர்யா