Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் 'அமீகோ' திரைப்படம்!

சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் 'அமீகோ' திரைப்படம்!

J.Durai

, சனி, 20 ஜூலை 2024 (14:02 IST)
அறிமுக இயக்குநர் பி.பிரவீண் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அமீகோ'  திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
 
இத்திரைப்படத்தில் சாந்தினி தமிழரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
அர்ஜுன் சோமையாஜுலா, சுவிதா ராஜேந்திரன், பிரவீன் இளங்கோ, வத்சன் சக்கரவர்த்தி, வெக்கே, மனிஷா ஜஷ்னானி, பிரக்யா உட்பட மற்றும்  பலர் நடித்துள்ளனர்.
 
வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'அயலி' எனும் இணைய தொடர் புகழ் ரேவா இசையமைத்திருக்கிறார். ஏழுமலை ஆதி கேசவன் கலை இயக்குநராக பணியாற்ற, படத்தொகுப்பு பணிகளை பிரதீப் சந்திரகாந்த் கவனித்திருக்கிறார்.
 
சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரத்யாக்ரா மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. கிரிஜா தயாரித்திருக்கிறார்.
 
இணை தயாரிப்பு பணியை ஜீத்து பிரபாகரன் மேற்கொண்டிருக்கிறார். 
 
இது குறித்து பேசிய  இயக்குநர் பி.பிரவீண் குமார்........
 
அமீகோ திரைப்படம் இந்தியாவில் தயாராகி இருக்கும் முதல் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் திரைப்படமாகும். இந்திய திரை உலகினரை திரும்பிப் பார்க்க வைக்கும் புதுமையான திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. 
 
டிஜிட்டல் உலகின் மறுபக்கத்தை திகிலூட்டும் அம்சங்களுடன் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கிறது. 
 
ஆன்லைன் தொடர்பான அத்துமீறலில் சிக்கும் நண்பர்கள் குழுவை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.‌இவர்கள் இணையத்தின் மறைவான பகுதியில் பதுங்கி இருக்கும்.
 
ஒரு தீங்கை விளைவிக்கும்  நிறுவனத்தின் கொடூரமான சவால்களை எதிர் கொண்டவர்களாக இருக்கலாம்  அல்லது வெளிப்புறத் தோற்றத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற பயங்கரமான யதார்த்தமாகவும் இருக்கலாம். 
 
இந்த திரைப்படத்தின் சிறப்பம்சம் அதன் தனித்துவமான திரைக்கதையிலும், ஜானரிலும் உள்ளது. சைபர் திரில்லர் திரைப்படங்கள் பல ஆண்டுகளாக பார்வையாளர்களை வசீகரித்து, தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கத்தையும், அதிகரித்து வரும் ஆபத்துகளையும் விவரித்திருக்கிறது.
 
பாரம்பரியமாக இந்திய திகில் படங்கள் பெரும்பாலும் பேய் , ஆவி போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை நம்பியுள்ளன. ஆனால் 'அமிகோ ' இதுவரை யாரும் அறியப்படாத பிரதேசத்திற்குள் நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் உலகில் அமைதியற்ற சாத்தியக்கூறுகளை இந்த புதிய முற்போக்கான படைப்பு பார்வையாளர்களை பயமுறுத்தும்.
 
அதே தருணத்தில் கவர்ந்திழுக்கவும் செய்யும். 
 
அமீகோ என்றால் நண்பர் என பொருள். இந்தத் திரைப்படம் நண்பர்களை சுற்றியுள்ள சூழ்ச்சிகளையும், அதன் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளையும் சுவாரசியமாக இருக்கும்.மேலும் இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க அடையாளத்தை ஏற்படுத்தும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ் மாடர்ன் உடை புகைப்படங்கள்!