Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவாக CWC புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 5 ஜூன் 2025 (11:44 IST)
விஜய் டிவியில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் புகழ். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னர்  ‘மிஸ்டர் ஸூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தமானார்.

இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தள்ளிப் போகிறதா பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம்?

சின்மயி வெர்ஷனா?.. தீ வெர்ஷனா?... அடிச்சிகிட்ட ரசிகர்கள் – மணி சார் வைத்த ட்விஸ்ட்!

மன்னிப்புக் கேட்க முடியாது… கமலுக்கு ஆதரவாக டீஷர்ட் அணிந்து தக்லைஃப் பார்க்க வந்த ரசிகர்

சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த நடிகர் முருகன் காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

தன்னுடைய ரோல் மாடல் பெயரிலானக் காரை வாங்கிய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments