நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நகைச்சுவை நடிகரான விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நல குறைவால் காலமானார். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் அவரது இறப்புக்கு தடுப்பூசி காரணமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆராய்ந்த தேசிய குழு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் ஏப்ரல் 17 ஆம் தேதி காலமானார். நடிகர் விவேக்கின் மரணம் தற்செயலானது, கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.