கவின் ஜோடியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை நடிகை!
மக்கள் மத்தியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் சித்ரா நடித்து வந்த நிலையில் அவர் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்து விட்டதை அடுத்து காவ்யா அருள்மணி என்பவர் அந்த கேரக்டரில் நடித்து வந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கவின் நடிக்க உள்ள ஊர்க்குருவி என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க காவ்யா அறிவுமணி ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை விக்னேஷ் சிவனின் உதவியாளர் அருண் பேட்ரிசியான் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்படுகிறது