Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதாரங்களை உடனே ஒப்படையுங்கள்: சூரிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (17:55 IST)
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் தயாரிப்பாளரும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் கொடவாலா என்பவர் மீது நடிகர் சூரி நில மோசடி வழக்கு பதிவு செய்தார் என்பதும் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் நடிகர் சூரி அளித்த நிலமோசடி புகார் மீது முறையாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் சூரியின் தரப்பினர் வாதாடும் போது முன்னாள் டிஜிபிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தனர். அதனை அடுத்து சூரி தரப்பிடம் உள்ள ஆதாரங்களை உடனடியாக போலீஸிடம் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
 
இதனை அடுத்து விரைவில் சூரி தரப்பினர் தங்களிடம் உள்ள ஆதாரங்களை காவல்துறையிடம் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை நடக்கிறது அஜித் & கோ பங்கேற்கும் ’24 H’ ரேஸ்… தயாரான AK!

பிரேக்கிங் பேட் சீரிஸில் இடம்பெற்ற வீட்டை 34 கோடி ரூபாய்க்கு விற்க உரிமையாளர் முடிவு!

ரிலீஸ் தேதியில் சிறு குழப்பம்… வீர தீர சூரன் படக்குழு எடுக்கப் போகும் முடிவு என்ன?

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

கலெக்டரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கார்த்திக் சுப்பராஜ் ‘கேம்சேஞ்சர்’ கதையை எழுதியுள்ளார்… எஸ் ஜே சூர்யா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments