Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

#KGFChapter2FirstLook: நராச்சியின் கதவுகள் திறக்க கவுண்ட் டவுன் பிகின்ஸ்!!

#KGFChapter2FirstLook: நராச்சியின் கதவுகள் திறக்க கவுண்ட் டவுன் பிகின்ஸ்!!
, வியாழன், 19 டிசம்பர் 2019 (13:03 IST)
இன்னும் இரண்டு நாட்களில் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

 
கடந்த வருடம் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து வெளியான படம் கே.ஜி.எஃப். கன்னடத்தில் உருவான இந்த படம் ஒரே சமயத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்பட நான்கு மொழிகளில் வெளியானது. 
 
கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவான இந்த படமும், அதன் பாடல்களும் அனைத்து மொழியினராலும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின்  இரண்டாம் பாகம் 2020ல் வெளியாகவுள்ளது. 
 
முதல் படத்தில் பல ட்விஸ்டுகள் வைத்து முடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்புகளுக்காக பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது இரண்டாம் அத்தியாயத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 21 அன்று வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
 
தற்போது படக்குழு தரப்பில் நராச்சியின் கதவுகள் இன்னும் இரண்டு நாட்களில் திறக்கப்படும் என போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து டிவிட்டரில் #KGFChapter2FirstLook என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு ஃபர்ஸ்ட் லுக்குக்கான கவுண்ட் டவுனும் துவங்கியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஒரு 96...ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெரும் "சில்லு கருப்பட்டி" ட்ரைலர்!