Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருட்டறையில் முரட்டு குத்து 2: யாஷிகாவையே மிஞ்சும் ஷாலு ஷம்மு!

Advertiesment
இருட்டறையில் முரட்டு குத்து 2: யாஷிகாவையே மிஞ்சும் ஷாலு ஷம்மு!
, புதன், 18 டிசம்பர் 2019 (16:02 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஹர ஹர மஹாதேவிக்கி’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இளம் ரசிகர்களை கூண்டோடு கவர்ந்த இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அதற்கு பிறகு  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ என்ற அடல்ட்  படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்தார். 
 
நடிகர் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடித்திருந்த இப்படத்தில் ஆபாசம், இரட்டை அர்த்த வசனம் உள்ளிட்டவை முழு முழுக்க நிறைந்திருந்ததால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் அதே படத்தின் இரண்டாம் பாகத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி வருகிறார். 
 
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்தில் ஷாலு ஷம்மு ஒரு முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். கடந்த சில நாட்களாக இஷ்டத்துக்கு கவர்ச்சியை காட்டி கட்டுக்கடங்காமல் இருந்து வரும் ஷாலு இந்த படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சி  காட்டி நடித்துள்ளாராம். இந்த தகவலை அறிந்த நெட்டிசன்ஸ் இவங்க யாஷிகாவையே மிஞ்சிடுவாங்க போலயே என கூறி கிண்டலடித்து வருகின்றனர். இப்படம்  வருகிற 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை குறிவைத்து தயாராகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷுட்டிங் மோடுக்கு ரெடியான அஜித் – ஆனால் ஹிரோயின் ?