அசால்டா இருக்காதீங்க…துக்கத்துடன் சொல்லுறேன்,கை கூப்பி வேண்டிக் கொண்ட வடிவேலு!!

வியாழன், 26 மார்ச் 2020 (22:05 IST)
அசால்டா இருக்காதீங்க…துக்கத்துடன் சொல்லுறேன், கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்ட வடிவேலு!

இந்நிலையில் வைகைப்புயல் வடிவேலு தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனாவுக்கு உலகமே அஞ்சி வருகிறது. இதனால் சினிமா பிரபலங்கள் ,விளையாட்டு நட்சத்திரங்கள் எஃப்,எம் மற்றும் தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வைகைப்புயல் வடிவேலு தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மன வேதனையுடன் துக்கத்துடன் சொல்லுகிறேன்.. என தயவு செய்து அரசு சொல்லுகிற படி வீட்டுக்குள்ளேயே இருங்க. நமக்காக தான் சொல்லுறாங்க,.. அவங்க சொல்லமாறி கேட்டு நடங்க, கொஞ்ச நாளுக்கு, உயிரை பணயம் வைச்சிருக்கற மருத்துவர் சொல்லதறபடி, நம்மள பாதுகாக்க காவல்துறை அதிகாரிகள் சொல்லறத கேட்டு நடங்க.. யாருக்காக இல்லையோ ..கையெடுத்து கும்பிட்டுக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்..நம்ம புள்ள குட்டிக்காக , சந்ததிக்காக, வம்சாவளிக்காக என கண்ணீர்விட்டு தேம்பி அழுதபடி பேசியுள்ளார்.

இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது

நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவழிக்காக எல்லோரும் வீட்டுலயே இருங்க

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கொரோனா வைரஸ் எதிரொலி: ஏஆர் ரஹ்மான் எடுத்த அதிரடி முடிவு