நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

vinoth
வியாழன், 17 ஜூலை 2025 (08:11 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்து விட்டு கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கூலி படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ் “ரஜினி சாருக்காக நான் முதலில் சயின்ஸ் பிக்‌ஷன் கதையைதான் எழுதினேன். ரஜினி சாருக்கும் அந்த கதை பிடித்திருந்தது. ஆனால் அந்த படத்தைத் தொடங்குவதற்கே ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்பதால் பின்னர் கூலி கதையை எழுதினேன். ரஜினி சாருக்காக நாம் எந்த கதையை வேண்டுமானாலும் எழுதலாம். எல்லாக் கதைகளும் அவருக்குப் பொருந்தும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments