கூலி படத்துக்குத் தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சி எத்தனை மணிக்கு? வெளியான தகவல்!

vinoth
புதன், 13 ஆகஸ்ட் 2025 (08:19 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள ‘கூலி’ படம் இன்னும் 6 நாட்களில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘A’ சான்றிதழ் பெற்றுள்ளது.  இந்த படம் 2 மணிநேரம் 50 நிமிடம் ஓடும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த படத்துக்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. சிறப்புக் காட்சியை காலை 9 மணிக்குத் திரையிட்டு இறுதிக் காட்சி முடியும் நேரம் இரவு 2 மணிக்குள் முடியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments