ஜெயிலர் மற்றும் வேட்டையன் ஆகிய ஹிட் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
துறைமுகப் பின்னணியில் தங்கக் கடத்தல் பற்றிய படமாக கூலி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 25 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் அந்நிகழ்ச்சி நடக்கும் என சொல்லப்படுகிறது.