Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குக் வித் கோமாளி ரித்திகாவுக்கு திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து

rithika
, ஞாயிறு, 20 நவம்பர் 2022 (14:02 IST)
குக் வித் கோமாளி ரித்திகாவுக்கு திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரித்திகாவுக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து அவருக்கு சின்ன திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ரித்திகா. இவர் சமீபத்தில் திருமணம் செய்யப்போவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்த நிலையில் இன்று அவர் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார்
 
திருமண புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் ரித்திகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ராக்கர்ஸ் கொஞ்சம் அடக்கி வாசி.. எதிர்ல நிக்கிறது யார் யோசி? – அஜித் ரசிகர்கள் போஸ்டர் வைரல்!