Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்ராக்கர்ஸ் கொஞ்சம் அடக்கி வாசி.. எதிர்ல நிக்கிறது யார் யோசி? – அஜித் ரசிகர்கள் போஸ்டர் வைரல்!

ajith poster
, ஞாயிறு, 20 நவம்பர் 2022 (13:04 IST)
அஜித் நடித்துள்ள துணிவு படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி தயாராகியுள்ள படம் துணிவு. அஜித் – எச்.வினோத் கூட்டணியின் மூன்றாவது படம் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தையும் போனிக் கபூரே தயாரித்துள்ளார்.

வங்கி கொள்ளையை மையமாக கொண்டு தயாராகியுள்ள இந்த படத்தில் அஜித் ஆன்ட்டி ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.


வாரிசு படத்திற்கான தியேட்டர் ஒப்பந்தம் இன்னும் தொடங்காத நிலையில் துணிவு படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெரும்பாலான திரையரங்குகளை துணிவு படத்திற்கு பேசி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் துணிவு வெளியாக போவதை கொண்டாடும் வகையில் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ள அஜித் ரசிகர்கள் “பணம் வாங்கி செயல்படும் ட்ராக்கர்ஸ் கொஞ்சம் அடக்கி வாசி. எதிர்ல நிக்கிறவர் பலம் என்னன்னு கொஞ்சம் யோசி” என யாரையோ குறிப்பிட்டு வாசகங்களை எழுதியுள்ளனர்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரி செல்வராஜின் அடுத்த படம்.. ஹீரோ இவரா?