Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூர் பெண்கள் பற்றிய சர்ச்சைக்குரிய வசனம்… Lokah படத்தில் இருந்து நீக்கம்!

Advertiesment
கல்யாணி ப்ரியதர்ஷன்

vinoth

, புதன், 3 செப்டம்பர் 2025 (08:15 IST)
ஓனம் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘லோகா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் டோம்னிக் எழுதி இயக்கியுள்ள ‘லோகா’ திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை துல்கர் சல்மான் தன்னுடைய ‘wayfrayers films’ நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த படம் மோகன்லாலின் ‘ஹ்ருத்யபூர்வம்’ திரைப்படத்தோடு வெளியானது. முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று தற்போது 100க்கும் மேற்பட்ட திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முதல் வார இறுதியில் இந்த படம் 60 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மலையாள சினிமாவில் இருந்து முதல் பேன் இந்தியா ஹிட்டாக ‘லோகா’ அமைந்துள்ளது.

இந்த படத்தின் கதைக்களம் பெங்களூருவில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருந்தது. அதில் பெங்களூர் பெண்கள் பற்றிய சில அவமதிக்கும் விதமான வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதைப் படத்தில்  வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த சாண்டி பேசுவது போல வைத்திருந்தனர். அந்த வசனங்களுக்குக் கர்நாடகாவில் இருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் வருத்தம் தெரிவித்து அந்த வசனங்கள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ்ணு இடவனின் புதிய பயணம்: லோகேஷ், நெல்சன் போல் வருவாரா?