Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல கவர்ச்சி நடிகைக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார்

Advertiesment
பிரபல கவர்ச்சி நடிகைக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார்
, சனி, 10 பிப்ரவரி 2018 (12:05 IST)
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலரான  எமி என்ற இனோச் மோசஸ் என்பவர் குழந்தைகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் “பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் ‘வீரமாதேவி’ படப்பிடிப்பில்  கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கலந்து கொள்ளவதால், அந்த பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிலியோன் இணையதளத்தில் வெளியாகும் ஆபாச படங்கள் குழந்தைகள் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது. ‘வீரமாதேவி’ படம் தமிழ் கலாசாரத்தை சொல்லும் படம் என்று கூறப்படுகிறது. இந்தப்  படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி லியோன். கவர்ச்சியாக நடிக்கக்கூடிய சன்னிலியோன் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் கவர்ச்சியாக  நடிப்பார். அதை காண அங்கு அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள் எனவே இந்த படப்பிடிப்பில் சன்னிலியோன் கலந்து கொள்ள தடைவிதிக்க வேண்டும்”  என்று கூறப்பட்டு உள்ளது.
 
இதுகுறித்து ஏற்கனவே நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சவரக்கத்தி - திரை விமர்சனம்!