Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எப்போது வேண்டுமானாலும் சன்னி லியோனை பார்க்கலாம்; வைரல் வீடியோ

Advertiesment
எப்போது வேண்டுமானாலும் சன்னி லியோனை பார்க்கலாம்; வைரல் வீடியோ
, சனி, 20 ஜனவரி 2018 (11:05 IST)
பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். இப்போது மீண்டும் தமிழுக்கு வந்து நடித்து வருகிறார். இவரது மெழுகு சிலை டெல்லியில் நிறுவப்பட உள்ளது. இந்தத் தகவலை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் தயாராகும் 'வீரமாதேவி' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
 
இந்நிலையில் ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் என பல பிரபலங்களின் சிலை டெல்லியில் உள்ளது. அந்த வரிசையில் சன்னி லியோனின் சிலையும் டெல்லியில் உள்ள இந்த மியூசியத்தில் வைக்கப்பட உள்ளது. இதற்காக சன்னி லியோனின் மெழுகு சிலை உருவாக்கப்பட உள்ளது. சிலை  நிறுவப்பட்ட பின் ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்து வரலாம்.
 
சன்னி லியோனின் தத்ரூப சிலையை உருவாக்குவதற்காக அவரது கருவிழி, முடி நிறம், கை, கால், உடல் அளவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை ஒரு  வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர்களிடம் இருந்து விருதினை பெற மாட்டேன்: அடம் பிடித்த சத்யராஜ்