Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இணைந்த முதல் காமெடி நடிகர்!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (12:44 IST)
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இதுவரை ரகசியமாக வைத்திருக்கின்றனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சதீஷ் நடிக்கும் படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதால் தற்போது வடிவேலு படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த படத்தின் கதைப் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் செல்லமாக வளர்க்கும் நாய்களை திருடி அதை அவர்களிடமே பேரம் பேசி மீண்டும் விற்கும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறாராம். அதை உறுதி செய்வது போலவே படத்தின் போஸ்டரும் அமைந்திருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. அதில் முதலாவதாக டாக்டர் படத்தில் கலக்கிய ரெட்டின்ஸ் கிங்ஸ்லே ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments