Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெருங்கும் கோப்ரா படத்தின் ரிலீஸ்… மீண்டும் சூடு பிடிக்கும் பணிகள்

நெருங்கும் கோப்ரா படத்தின் ரிலீஸ்… மீண்டும் சூடு பிடிக்கும் பணிகள்
, செவ்வாய், 17 மே 2022 (15:22 IST)
விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த கோப்ரா கடந்த மாதம் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோப்ரா திரைப்படத்தின் டப்பிங் பணிகளை அடுத்த வாரம் முதல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹேக் செய்யப்பட்ட தனுஷ் பட நிறுவனத்தின் யுடியூப் பக்கம்! வெளியான லேட்டஸ்ட் தகவல்!