கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் வரை நடந்து நேற்று சென்னையில் முடிந்துள்ளது.
கோப்ரா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பட்ஜெட் 50 கோடிகள் எனப் தயாரிப்பாளருக்கு சொல்லியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆனால் மூன்று வருட கால தாமதம், இயக்குனரின் சரியான திட்டமின்மை ஆகியவற்றால் பட்ஜெட் இப்போது 87 கோடி ரூபாய் ஆகிவிட்டதாம். இதனால் தயாரிப்பாளர் இயக்குனர் மேல் பயங்கர கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சமீபத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பட்ஜெட் அதிகமானதற்கு தான் காரணமில்லை என்று கூறியிருந்தார்.
இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் என்றால் அது ஷங்கர் இயக்கிய ஐ திரைப்படம்தான். அந்த படத்தின் பட்ஜெட் 80 கோடி ரூபாய் என சொலல்ப்படுகிறது. ஆனால் அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் என்பதால் அதனை வியாபாரம் செய்ய முடிந்தது. ஆனால் கோப்ரா படத்தினை இவ்வளவு பெரிய தொகைக்கு எப்படி தயாரிப்பாளர் வியாபாரம் செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.