Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதயநிதியை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்!

Advertiesment
Udhayanithi
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:50 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான உதய நிதிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் குருவி என்ற திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் என்ற நிறுவனம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் உதய நிதி. அதன்பின், சூர்யாவின் ஆதவன், மன்மதன் அம்பு உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார்.

அதன்பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது,  ஒரு சில படங்களை மட்டுமே உதய  நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட்  வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில், அதிமுகவின் 10 ஆண்டுகாலத்திற்குப் பின் , கடந்த ஆண்டு திமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்பட்டது.

திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக பொறுப்பேற்ற உதய நிதி தற்போது படங்களில் நடித்தும் தயாரித்ததும் வருகிறார்.

சமீபத்தில் வெளியான விக்ரம் உள்ளிட்ட பல படங்களை தமிழகம் முழுவதும் விநியோகித்து வருவது உதய  நிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ்.

பெரும்பாலான படங்களை  விநியோகித்து வருவது பற்றி எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் இதுபற்றி விமர்சனம் எழுப்பி வருவதாகவும், அனைத்துப் படங்களையும் ரெய் ஜெயண்ட் மூவிஸ் விநியோகிக்க முற்படுவதாக உளவுத்துறை முதல்வர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர்.

எனவே, பிரபல நடிகளின் பெரிய படங்களின் தயாரிப்பு மற்றும் முக்கிய படங்களை மட்டும்  விநியோகிக்கும்படி உதய நிதிக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வில்லனாக மாறிய காமெடி நடிகர்: நீண்ட இடைவெளிக்கு பின் குவியும் படங்கள்!