Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

வில்லனாக மாறிய காமெடி நடிகர்: நீண்ட இடைவெளிக்கு பின் குவியும் படங்கள்!

Advertiesment
madhan bop
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:49 IST)
வில்லனாக மாறிய காமெடி நடிகர்: நீண்ட இடைவெளிக்கு பின் குவியும் படங்கள்!
தற்போது ஹீரோக்களே வில்லன்களாக மாறிவரும் நிலையில் காமெடி நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழ் திரையுலகின் காமெடி நடிகரான மதன்பாப் கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கனடா சென்று விட்டதாகவும் அதன் பிறகு தற்போது நஷ்டத்தை சரிக்கட்டிய பின்னர் மீண்டும் சென்னை திரும்பி விட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
 
ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கிறேன் என்றும் ஒரு கன்னட படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன் என்று கூறிய மதன்பாப், முருகதாஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ’1947’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன் என்றும் காண்ட்ராக்டர் நேசமணி என்ற படத்தில் யோகிபாபுவுக்கு அப்பாவாக நடிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மீண்டும் ரீ எண்ட்ரி ஆகியுள்ள காமெடி நடிகர் மதன்பாப்-க்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு மாதம் நடிகர் நடிகைகளிடம் தேதிகளைப் பெற்ற பொன்னியின் செல்வன் டீம்… எதற்கு தெரியுமா?