’ஒடிசே’ படமாக்களுக்கு 20 லட்சம் அடி பில்ம் ரோல்களைப் பயன்படுத்திய கிறிஸ்டோஃபர் நோலன்…!

vinoth
சனி, 15 நவம்பர் 2025 (09:00 IST)
உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் இயக்குனர்களில் முக்கியமானவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய டார்க் நைட் ட்ரைலாஜி, இன்செப்ஷன், இண்டெஸ்டெல்லார் உள்ளிட்ட படங்களுக்கு தமிழகத்திலுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது முதன்முறையாக வரலாற்று இதிகாச படத்தை இயக்குகிறார் நோலன்.  இதில் மேட் டேமன் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஹாலிவுட்டில் பெரும்பாலும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் நிலையில், நோலன் அதற்கு முற்றிலும் நேரெதிரானவர். அவருக்கு கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்துவது பிடிக்காது என்பதால் அவர் படங்களில் பல காட்சிகளை ஒரிஜினலாகவே படமாக்குவார். தற்போது ஒடிசிக்காக பிரம்மாண்டமாக ஒரு நகரையே அவர் உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தின்  படப்பிடிப்பி இத்தாலி, மொராகோ, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

உலகமே டிஜிட்டலுக்கு மாறிவிட்டாலும், இன்னும் நோலன் பில்ம் ரோலிலேயே படமாக்கி வருகிறார். ஒடிசே  படத்துகாக சுமார் 20 லட்சம் அடி ஐமேக்ஸ் பில்ம் ரோலைப் பயன்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 91 நாட்களில் அவர் இந்த படத்தைப் படமாக்கி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments