ஹாலிவுட்டில் வித்தியாசமான கதைகளங்களில் படம் எடுத்து உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டிருப்பவர் கிறிஸ்டோபர் நோலன். மெமண்டோ, டார்க் நைட், இன்செப்ஷன் மற்றும் இண்டர்ஸ்டெல்லார் போன்ற தன்னுடைய படங்களின் மூலம் உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கிறிஸ்டோபர் நோலன்.
கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் அவருக்கு சிறந்த இயக்குனருக்காக ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது. உலகளவில் மிகவும் கவனிக்கப்படும் இயக்குனராக தற்போது நோலன் உள்ளார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரான இவருக்கு அமெரிக்கா தங்கள் நாட்டு குடியுரிமையும் கொடுத்துள்ளது. இந்நிலையில் திரைத்துறையில் இவரின் சாதனைகளைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் நோலனுக்கு சர் பட்டத்தை வழங்கியுள்ளார்.