சித்தார்த் நடித்த சித்தா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி நவம்பர் 17 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தார்த் நடிப்பில் உருவான சித்தா என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பு பெயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நவம்பர் 17ஆம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்ததால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் ஓடிடியில் இந்த படத்தை எதிர்பார்த்த நிலையில் இந்த படம் வெளியாகவில்லை. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி நவம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நவம்பர் 28 முதல் சித்தா வெளியாகும் என்ற புதிய போஸ்டரையும் டிஸ்னி ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது