Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ ரிலிஸ் தேதி அறிவிப்பு!

சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ ரிலிஸ் தேதி அறிவிப்பு!
, திங்கள், 31 ஜனவரி 2022 (18:47 IST)
சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ திரைப்படம் ஏப்ரல் 29-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
சற்றுமுன் ’ஆர்.ஆர்.ஆர்\ திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதி ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படம் 140 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘துருவ நட்சத்திரம்’ படத்தை முடிக்க ஒப்புக்கொண்ட விக்ரம்!