Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி!
, புதன், 26 ஜனவரி 2022 (10:24 IST)
தெலுங்கு திரைப்பட நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் குணமடைந்துள்ளனர்.  இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 
 
அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் எனக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
 
எனவே கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாத்தி படத்தில் இருந்து முக்கியக் கலைஞர் விலகல்!