Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷங்கர்-ராம்சரண் தேஜா படத்தில் சிரஞ்சீவி நடிக்கின்றாரா?

ஷங்கர்-ராம்சரண் தேஜா படத்தில் சிரஞ்சீவி நடிக்கின்றாரா?
, செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (21:45 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார் 
 
இந்த படம் தமிழ் உள்பட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராம்சரண் தேஜா ஜோடியாக நடிக்க க்யாரா அத்வானி நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ராம் சரண் தேஜாவின் தந்தை சிரஞ்சீவி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திலும் அவர் ராம் சரணுக்கு தந்தையாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த தகவல் காரணமாக இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு சில படங்களில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் தேஜா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ணன்’ படத்திற்கு முன்பதிவு தொடங்கியது: 50% சலுகை வழங்கிய ஏஜிஎஸ் தியேட்டர்!