பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தலத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சின்மயி பெண்களுக்கு எதிராக நடிக்கும் அநீதிகள் குறித்து குரல் எழுப்பி அவர்களுக்கு ஆதரவாக உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் சின்மயி குறித்து ஜோ மைக்கேல் சர்ச்சையான விஷயம் குறித்து கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். அதாவது, சினிமா வாய்ப்பு கிடைக்கணும் என்பதால் எல்லா வேலையும் பாக்குறது... அன்னைக்கே இயக்குனர் ஒருவர் என்னை படுக்க கூப்பிடுறார்னு பிரஸ்ல சொல்ல வேண்டியதானே. அன்னைக்கு மானத்தை விட வாய்ப்பு பெருசா தெரிஞ்சுதோ..? என பேசியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.