Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணிடம் இருந்து வந்த மெசேஜ்... சின்மயி வார்னிங் ட்விட்

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (15:32 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீடூ என்ற ஹேஷ்டேட் மிகவும் பிரபலமானது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பெண்கள் தங்களது வாழ்வில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் இன்னல்களை வெளியிட்டனர். 
 
இந்த ஹேஷ்டேக் தமிழ் சினிமாவில் பிரலயத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணமாக இருந்தவர் பாடகி சின்மயி. ஆம், சின்மயி கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய குற்றச்சாட்டு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
அதன் பின்னர் நடிகைகள் மட்டுமின்றி பலர் தங்களுக்கு நடந்து பாலியல் சீண்டல்கள் மற்றும் கொடுமைகளை பகிர துவங்கினர். அந்த வகையில் சமீபத்தில் ஆண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி சின்மயிக்கு மெசேஜ் செய்துள்ளார். 
 
அதில் அந்த நபர், நான் பள்ளி பருவத்தில் இருந்த போது பி.டி ஆசிரியரை திட்டிவிட்டேன். இதை எனது வகுப்பு சக மாணவன் கேட்டுவிட்டான். அன்று முதல் என்னை மிரட்டி பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கினான். இறுதியில் எப்படியோ தப்பித்தேன் என கூறியுள்ளார். 
 
இந்த பதிவை சின்மயி தனது டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டு ஆண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் இன்னல்கள் நடக்கிறது. இதை வெளியில் பேசி தீர்வு காண வேண்டும். அதோடு, எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டேன்... ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சம்பவம்!

புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என்னாச்சு… செல்வராகவன் அளித்த பதில்!

தீபாவளி வின்னர் லக்கி பாஸ்கரின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்… !

ராம்குமார் விஷ்ணு விஷால் படத்தில் நடந்த அதிரடி மாற்றம்!

கோவையில் தொடங்கும் ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… எப்போது தெரியுமா?

அடுத்த கட்டுரையில்