என் அப்பா செல்போனை தட்டிவிட்டது தவறு என்றாலும் கூட ஒருவரின் அனுமதி இல்லாமல் செல்பி எடுப்பதும் தவறு தான் என நடிகரும் சிவகுமாரின் மகனுமான கார்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மதுரையில் நடந்த விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டபோது செல்பி எடுக்க வந்த இளைஞர் ஒருவரின் செல்போனை அவர் தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்பு கோரிய நடிகர் சிவகுமார் செல்போனை தட்டிவிட்ட இளைஞருக்கு புதிய செல்போனையும் வாங்கிக் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் ஒருவரின் இல்லத்திருமண வரவேற்பு விழாவிற்கு சிவகுமார் சென்றிருந்த சிவகுமார் அங்கு தன்னுடன் செல்பி எடுக்க முற்பட்ட மற்றொரு வாலிபரின் செல்போனையும் தட்டிவிட்டார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பி இணையத்தில் சிவகுமாருக்கு எதிராக மீம்ஸ்கள் வலம் வந்தன. அவர் செல்போனை தட்டிவிட்டது தவறு என்றாலும் கூட ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை டிஸ்டர்ப் பண்ணுவதும் தவறே.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகரும் சிவகுமாரின் மகனுமான கார்த்தி ஒருவரின் அனுமதி இல்லாமல் செல்பி எடுத்து அவர்களை தொந்தரவு செய்வது தவறான விஷயம். இதை மீடூ போல் பெரிதுபடுத்துவது தேவையில்லாத விஷயம்.
அதேபோல் அந்த இடத்தில் அப்பா அவரின் கோபத்தை கட்டுப்படுத்தியிருக்கலாம் என கார்த்தி கூறினார்.