Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிகம் ட்ரெண்டாகி வரும் ’ச்சீ ச்சீ ச்சின்’ பாடல்.. அதன் அர்த்தம் என்ன தெரியுமா?

Advertiesment
Chi Chi re chin odisha song

Prasanth Karthick

, செவ்வாய், 28 ஜனவரி 2025 (10:33 IST)

தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒடிய மொழி பாடல் ஒன்று வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.

 

சமூக வலைதளங்களில் மொழி எல்லைகளை தாண்டி பல பாடல்கள் திடீரென ட்ரெண்டாவது வாடிக்கையாக உள்ளது. அப்படியாக கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் ‘சீ சீ சின்’ என்ற ஒடிய மொழி பாடல் ட்ரெண்டாக இருந்து வருகிறது. பலரும் ஜாலியாக டான்ஸ் ஆடும் ரீல்ஸ்களுக்கு கூட இந்த பாடல்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த பாடல் ஒரு சோக பாடல். காதல் தோல்வியில் காதலன் பாடும் இந்த பாடல் பலிபுல் Baliphul என்ற ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் அர்த்தம் இதுதான்..

 

Dhanake Dekhlu Tui Nani Sina

 

Manake Chihnilu Naai

 

நீ வசதியை பார்த்து விட்டாய் ஆனால் என்னுடைய உண்மையான மதிப்பை உணரவில்லை

 

Sunake Chinlu Banaake Chinlu

Manush Chinlu Naai

 

நீ தங்கத்தையும் நகைகளையும் உணர்ந்து விட்டாய் ஆனால் ஒரு உண்மையான மனிதனை அடையாளம் காணவில்லை

 

Dhan Naai Boli Mora Paakhe Nani

Taar Kaachhe Uthigalu

 

உன்னிடம் வசதி இல்லை என்பதால் என்னை இன்னொருத்திக்காக விட்டு விட்டாய்

 

Dhan Achhe Sina Man Naai Taakhe

Tui Jaani Na Paaralu

 

நீ அடையாளம் கண்ட அந்த வசதியானவன் ஒருவேளை இதயமற்றவனாக இருக்கலாம்

 

Gote Din Mishaa Jagidelu Naai

Kede Katha Karidelu

 

நாம் சேர்ந்து இருந்த நாட்களை நீ பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை

 

Muu Gaa’n Jaaikiri Aasalaa Bele

Kenta Paasari Delure Nani Chhi Chhi Chhi

 

நீ என்னிடம் மோசமான வார்த்தைகளை பேசி இருக்கிறாய்

 

நான் திரும்பி வருவதற்குள் எப்படி இதையெல்லாம் நீ மறந்தாய்

 

Chhi Chhi Chhi Re Nani Chhi

 

உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் நானி

 

Chhi Chhi Chhi Re Nani Chhi

 

உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் 

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் கதையில் நடிக்கும் அசோக் செல்வன்!