Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப்… இன்று வெளியாகும் அப்டேட்!

இயக்குனர் சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப்… இன்று வெளியாகும் அப்டேட்!
, சனி, 2 செப்டம்பர் 2023 (07:49 IST)
தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப். ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த ஈகா திரைப்படம் இந்தியா முழுவதும் ஹிட் ஆகி அவருக்கு பிரபலத்தைப் பெற்றுத் தந்தது. அதையடுத்து இப்போது அவர் பேன் இந்தியா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராஃப் போன்ற படங்களை ரீமேக் செய்து அதில் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்துக்கொண்டார். இதையடுத்து இப்போது பேன் இந்தியா படங்கள் உருவாகி வரும் நிலையில் நேரடியாக இரண்டு தமிழ் படங்களில் நடிக்க உள்ளார்.

அதில் தாணு தயாரிப்பில் மேக்ஸ் என்ற ஒரு படத்தில் ஏற்கனவே நடித்து வரும் அவர், இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சேரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இன்று கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி, நெல்சனுக்கு கார்… அப்ப அனிருத்துக்கு?... சமூகவலைதளத்தில் பரிந்துரைக்கும் ரசிகர்கள்!