Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டாரை இயக்கும் சேரன்- #Kichcha47 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Advertiesment
kicha sudeep- cheran
, சனி, 2 செப்டம்பர் 2023 (17:31 IST)
கன்னட  சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப். இவர் பின்னணி பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளார் எனப் பன்முக கலைஞராக இருக்கிறார்.

இவர், , கிச்சா, தம், நந்தி, சந்து, விஜய்யுடன் இணைந்து புலி, நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த  நிலையில், தற்போது சுதீப் ஹெப்பிலி என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இன்று  கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப்பின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அடுத்த பட அப்டேட் இன்று  வெளியாகியுள்ளது.

ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொற்காலம், பாண்டவர் பூமி, பொக்கிஷம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிக்கவுள்ள ‘கிச்சா47’ பட அதிகாரப்பூர்வ அறிவிப்பை  புதிய போஸ்டருடன்  சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டு, சுதீப்பிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது.

சேரன்- சுதீப் இணைந்துள்ள இப்படத்திற்கு தென்னிந்திய சினிமாவில்  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவில் பாடலாசிரியரான பிரபல நடிகை