Publish Date: Wed, 10 Feb 2021 (16:34 IST)
Updated Date: Wed, 10 Feb 2021 (16:35 IST)
விஷாலின் சக்ரா திரைப்படம் ரிலீஸாவதில் கடைசி நேர சிக்கல்கள் எழுந்துள்ளன.
விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சக்ரா. ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடி தளங்களுக்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் திரையரங்குகளில் பிப்ரவரி 19 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
ஆனால் அதற்குள்ளாகவே அந்த படத்துக்கான சிக்கல்கள் எழ ஆரம்பித்துவிட்டன. விஷாலின் முந்தைய படங்களின் நஷ்டம் மற்றும் அதற்கான கடன் கொடுத்த பைனான்சியர்கள் எல்லாம் இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தை முற்றுகையிட்டு வருகின்றனராம். அவர்கள் எல்லாம் தடை தெரிவிக்காமல் இருந்தால் மட்டுமே சக்ரா ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.