Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு சின்ன வயசுலயே ஆஸ்துமா இருந்தது! – விழிப்புணர்வை ஏற்படுத்தும் காஜல்!

Advertiesment
எனக்கு சின்ன வயசுலயே ஆஸ்துமா இருந்தது! – விழிப்புணர்வை ஏற்படுத்தும் காஜல்!
, புதன், 10 பிப்ரவரி 2021 (10:36 IST)
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக அறியப்படும் காஜல் அகர்வால் ஆஸ்துமா குறித்த தனது சொந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது ஆஸ்துமா எனப்படும் மூச்சுதிணறல் நோயால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். காற்று மாசுபாடு, சுகாதாரமின்மை, அதிக பனிப்பொழிவு என ஆஸ்துமா உருவாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படும் நிலையில் சிறு குழந்தைகள் உட்பட ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்துமா குறித்து விழிப்புணர்வு பதிவை நடிகை காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தான் சிறுவயதிலிருந்தே ஆஸ்துமாவால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், இன்ஹேலர் பயன்படுத்தியதாலேயே தன்னால் அதை கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் மக்கள் இன்ஹெலர் பயன்படுத்த தயக்கம் காட்டக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலக்கும் ஆல்யா மானசா மகளின் கியூட் வீடியோ!